இடுகைகள்

வீட்டில் பணவரவை அதிகரிக்க செய்ய வேண்டிய சிறந்த பரிகாரம்

படம்
  வீட்டில் பணவரவை அதிகரிக்க செய்ய வேண்டிய சிறந்த பரிகாரம் உங்கள் வீட்டில் பணவரவை அதிகரிக்க சில எளிய பரிகாரங்களை பின்பற்றலாம். இந்த பரிகாரத்தை செய்யும்போது, கடன் தொல்லைகள் நீங்கி, பணக்கஷ்டங்கள் முடிவடையும். முழுமையான நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தைச் செய்தால், உங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்டிப்பாக ஏற்படும். பரிகாரத்திற்குத் தேவையான பொருட்கள்: 1. பச்சை நிறம் கொண்ட பேனை 2. ஐந்து ரூபாய் நாணயம் 3. மஞ்சள் கலந்த தண்ணீர் 4. வெந்தயம் செய்யும் நேரம்: • புதன் கிழமை – இதைச் செய்வதற்கான மிக உகந்த நாள். • புதன் ஹோரை (புதன் கிரகத்துக்கான நேரம்) – இதைப் பயன்படுத்தி செய்யுங்கள். • குபேரனை நினைத்து மனதில் முழு நம்பிக்கையுடன் செயல் செய்ய வேண்டும். பரிகாரம் செய்வது எப்படி? 1. சுத்தமான இடம் தேர்ந்தெடுக்கவும் • முதலில் அமைதியான இடத்தில் உட்கார்ந்து, மனதைக் குவிக்கவும். 2. நாணயத்தை சுத்தம் செய்யவும் • ஐந்து ரூபாய் நாணயத்தை மஞ்சள் கலந்த தண்ணீரில் நன்கு கழுவி, பிறகு துடைத்துக் கொள்ளவும். 3. எட்டு இலக்கத்தை எழுதவும் • பச்சை பேனியை பய...

முக்கிய அறிவிப்பு : பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் இணைப்பு துண்டிப்பு - முழு விபரம்

படம்
  இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRC) அறிவித்துள்ளதாவது, எதிர்காலத்தில் TRCயில் பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்படும். இது, நாட்டிற்குள் சட்டவிரோதமாக தொடர்பாடல் உபகரணங்களை கொண்டு வருவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். இந்தத் திட்டம், ஜனவரி மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என TRCயின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார். இது, தற்போது பயன்படுத்தப்படும் கையடக்கத் தொலைபேசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.   எவ்வாறு பரிசீலிப்பது? இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRC) வழிகாட்டுதலின் படி, பதிவு செய்யப்படாத தொலைபேசிகளை பரிசீலிக்க (சோதிக்க) நீங்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்: 1. IMEI எண்ணை சரிபார்க்கவும் • ஒவ்வொரு கையடக்கத் தொலைபேசியிலும் ஒரு தனித்த IMEI (International Mobile Equipment Identity) எண் இருக்கும். • உங்கள் தொலைபேசியின் IMEI எண்ணை தெரிந்து கொள்ள, *#06# என டயல் செய்யவும். • IMEI எண் உங்கள் திரையில் காணப்படும...

சகல ஐஸ்வர்யங்களும் உங்களை தேடி வர இந்த பதிகங்களை பாடுங்கள்

படம்
நகைகள், முத்து மாலை, வைர நகைகள், பட்டாடைகள், வாசனைத் திரவியங்கள், விருந்து உணவு கிடைக்க; அனைத்து ‌ சுக போகங்களும் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்  பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்   பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர் செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்   செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர் முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை   அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங் கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்   கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.  1   வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி   விருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர் பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப்   பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந்   திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங்   கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.  2   பூண்பதோர் இளஆமை பொருவிடையொன் றேறிப்   பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப் பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர் ...

குடும்பஸ்தன் - விமர்சனம்

படம்
  குடும்பஸ்தன் பணம் இருந்தால் எல்லாம் கிடைத்துவிடும் என்று வாழும் குரு சோமசுந்தரம் மற்றும் சுயமரியாதையை வாழ்வின் அடிப்படையாகக் கருதும் மணிகண்டன் ஆகிய இருவரின் வாழ்க்கையைச் சுற்றி இந்த படம் அமைந்துள்ளது. அவர்களை சுற்றி நிறைந்த உறவினர்களும் கதையின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளனர். கலப்பு திருமணத்திலிருந்து படம் தொடங்குகிறது. தன் நண்பனுக்காக சண்டையிட்டு வேலையை இழக்கும் குடும்பஸ்தன் மணிகண்டன் கதையின் மையப் புள்ளி. எப்போதும் அவனை “நீ வாழ்க்கையில் தோல்வியையே ஒத்துக்கொள்” என்று கிண்டலடிக்கும் அக்காவின் கணவரும் கதைச்சூழலை மேலும் பதறச் செய்கிறார். கதை நகைச்சுவையாக செல்ல முயற்சிக்கிறது, ஆனால் உணர்ச்சிகரமான காட்சிகளையும் காமெடியாகக் கையாளுவதால், அவற்றின் தாக்கத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. சில காட்சிகள் செயற்கையாக இருந்தன. குரு சோமசுந்தரம் சிறந்த நடிகர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் இந்தப் படத்தில் தேவையற்ற காட்சிகள் அவரது திறமையை புறக்கணிக்கச் செய்தன. உதாரணமாக, சீனாவில் வேலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது அவர் செய்யும் செயல்கள் – சீன மொழியில் பேசுதல், அவர்களின் உடைகளை அண...

லஞ்சம் பெற்ற போலிஸ் உத்தியோகத்தர் கைது

படம்
கிரிபாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சார்ஜன்ட் ஒருவர் ரூ20,000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபாவ பகுதியில் வசிக்கும் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளரின் மனைவியுடன் திருமணமாகி பின்னர் பிரிந்த நிலைமை தொடர்பாக, அவரின் மனைவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இழப்பீட்டு வழக்கில், மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், பிடியாணையை நிறைவேற்றவும் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் ரூ20,000 இலஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது. மேலும், இலஞ்சத் தொகையை வழங்காத பட்சத்தில், முறைப்பாட்டாளருக்கு எதிராக சட்டவிரோத வழக்குகளை உருவாக்கி சிறையில் அடைக்க மிரட்டியதாகவும், இவ்வாறு செய்யாமல் இருக்க இலஞ்சம் வழங்குமாறு கூறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி, முறைப்பாட்டாளரின் வீட்டில் பணம் பெற வந்த போது, குறித்த பொலிஸ் அதிகாரியை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பிடித்து கைது செய்துள்ளனர்.

இணையத்தை கலக்கும் பிரதீபா வின் இளமை ததும்பும் போட்டோக்கள்

படம்