லஞ்சம் பெற்ற போலிஸ் உத்தியோகத்தர் கைது
கிரிபாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சார்ஜன்ட் ஒருவர் ரூ20,000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிபாவ பகுதியில் வசிக்கும் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளரின் மனைவியுடன் திருமணமாகி பின்னர் பிரிந்த நிலைமை தொடர்பாக, அவரின் மனைவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இழப்பீட்டு வழக்கில், மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், பிடியாணையை நிறைவேற்றவும் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் ரூ20,000 இலஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது.
மேலும், இலஞ்சத் தொகையை வழங்காத பட்சத்தில், முறைப்பாட்டாளருக்கு எதிராக சட்டவிரோத வழக்குகளை உருவாக்கி சிறையில் அடைக்க மிரட்டியதாகவும், இவ்வாறு செய்யாமல் இருக்க இலஞ்சம் வழங்குமாறு கூறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன்படி, முறைப்பாட்டாளரின் வீட்டில் பணம் பெற வந்த போது, குறித்த பொலிஸ் அதிகாரியை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பிடித்து கைது செய்துள்ளனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக
thanks for you feedback